கடைசி காலம் இதுவே காலையிலோ

கடைசி காலம் இதுவே காலையிலோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    கடைசி காலம் இதுவே

                        காலையிலோ மாலையிலோ

                        சேவல் கூவிடும் நேரத்திலோ

                        ஜீவாதிபதி இயேசு ராஜ ராஜன்

                        சீக்கிரம் வருகிறாரே எமக்காய் (2) - கடைசி

 

1.         மோச உலகம் நாசமடையும்

            மாய வேசங்கள் கடந்து போகும் - 2

            உலக ஆசைகள் மனதை மயக்கும்

            உயர்ந்த பரிசுத்த வாழ்வே போதும் (2) - கடைசி

 

2.         கள்ள கிறிஸ்துக்கள் எங்கும் எழும்பி

            கூடுமானாலோ வஞ்சிப்பார் நம்மை - 2

            அசுத்த ஆவியும் அற்புதம் செய்திடும்

            அதனை நிதானித்து நாம் எதிற்போம் (2) - கடைசி

 

3.         இயேசு வருவார் நம்மை அழைக்க

            ஏறிச் செல்வோம் மேகத்திலே நாம் - 2

            தலையை உயர்த்தி நமிர்ந்து நோக்குவோம்

            திரும்பி வருகிறார் அன்புடனே (2)

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=bIup3TGtFto

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு