இந்தியர் யார் இந்தியர் யார்

இந்தியர் யார் இந்தியர் யார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இந்தியர் யார்? இந்தியர் யார்?

                        இந்தியர் யார்? இந்தியர் யார்? - (2)

 

1.         ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்

            போராட்டம், வன்முறைக்கு உட்படாதவர்

            தேசத்தின் வளர்ச்சிகளை கெடுக்காதவர்

            அரசாங்க சட்டங்களை மீறாதவர்

                        அவரே உண்மை இந்தியர்கள்

                        உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - 2 - இந்தியர் யார்?

 

2.         பலவந்தம் செய்து மதம் மாற்றமாட்டார்

            ஏமாற்றி கொள்கைகளை விற்கமாட்டார்

            பிறரின் உரிமைகளை தடுக்கமாட்டார்

            தேசத்தின் நல் எண்ணம் ஓங்கச் செய்வார்

                        அவரே உண்மை இந்தியர்கள்

                        உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - 2 - இந்தியர் யார்?

 

3.         தேசத்தின் உடைமைகளை களவு செய்யார்

            கருப்பு பணங்களை ஏற்கமாட்டார்

            கொள்ளை அடித்து குவிக்கமாட்டார்

            வரிகளில் வஞ்சம் செய்யமாட்டார்

                        அவரே உண்மை இந்தியர்கள்

                        உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - 2 - இந்தியர் யார்?

 

4.         குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்வார்

            குறிப்பிட்ட கடமையில் தவறமாட்டார்

            லஞ்சம் எதுவும் வாங்கமாட்டார்

            சிபாரிசு, செல்வாக்கு நோக்கமாட்டார்

                        அவரே உண்மை இந்தியர்கள்

                        உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - 2 - இந்தியர் யார்?

 

5.         சுத்தம் சுகாதாரம் பாதுகாப்பார்

            சாலை விதிகளை கடைப்பிடிப்பார்

            ஒளித்தும் மறைத்தும் ஒன்றும் செய்யமாட்டார்

            உண்மை பிரஜையாக செயல்படுவார்

                        அவரே உண்மை இந்தியர்கள்

                        உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - 2 - இந்தியர் யார்?

 

6.         ஏழைகள், அகதிகள் நலம் தேடுவார்

            தான தர்மங்களில் பங்கெடுப்பார்

            விலங்குகள், பறவைகள் பாதுகாப்பார்

            தன்னைப்போல் பிறருக்கும் அன்பே செய்வார்

                        அவரே உண்மை இந்தியர்கள்!

                        உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - 2 இந்தியர் யார்?

 

- எமில் ஜெபசிங்

 

https://www.youtube.com/watch?v=-qFlKmh4nF4

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு