பயப்படாதே கலங்காதே பரமன்

பயப்படாதே கலங்காதே பரமன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   பயப்படாதே கலங்காதே

                        பரமன் இயேசு பேசுகின்றார் - 2

                        பரிவுடன் உன்னை தேற்றுகின்றார் (2)

                        புலம்பிடும் உன்னை ஆற்றுகின்றார் (2)

 

1.         உன்னைக் கைவிடேனே உன்னை விட்டு விலகேன்

            உதவியற்றோர்க்கு நான் துணையே - 2

            நேசித்தோரெல்லாரும் உன்னை மறந்தாலும்

            நீ என்னால் மறக்கப்படுவதில்லை (2) - பயப்படாதே

 

2.         உபத்ரவத்தாலே பரிசுத்தமடைவாய்

            உனக்கிந்த முள்ளே சோதனையே - 2

            கிருபையே போதும் என் பெலன் தருவேன்

            திரும்பவும் துளிர்க்கும் உன் சுகவாழ்வே (2) - பயப்படாதே

 

3.         உன்னை சபிப்போரை நீ ஆசீர்வதிப்பாய்

            உனக்கருள்வேனே எனது அன்பே - 2

            சத்துருக்கள் முன்னில் நீதியின் பாதையில்

            நித்தம் உன்னை ஜெயமாய் நடத்திடுவேன் (2) - பயப்படாதே

 

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=GGE01ZyHXPE

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு