ஜெபவேளை எமக்கானந்தம் என்றும்

ஜெபவேளை எமக்கானந்தம் என்றும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜெபவேளை எமக்கானந்தம் - என்றும்

            ஜெபமில்லா ஜெயமில்லை

            ஜெபம் எங்கள் ஜெயமே

           

                        ஜெபம் ஜெயம் (4)

 

1.         இருள் சூழந்த வனம் போன்ற

            இருண்ட கெத்செமனேயில்

            இறுதி வேளையில் ஜெபித்தீர்

            இரத்த வேர்வையும் பெருமூச்சும் பெருகிடவே

            அந்த இரவெல்லாம் ஜெபித்தீரையா - இந்த

                        ஜெபவேளை எமக்கானந்தம்

 

2.         மறுரூப மலைமீதில் தரிசனம் கொடுத்து

            உம் மகிமையை அளித்தீரைய்யா

                        அன்று போல உம் தரிசனம் எமக்கருளும்

                        எங்கள் அருமை ஆண்டவர் இயேசையா - 2 - இந்த

            ஜெபவேளை எமக்கானந்தம்

 

3.         சரீரமோ பெலவீனம் ஆவியோ உயிர்ப்பிக்கும்

            சலிப்பின்றி ஜெபித்திடுவோம்

                        அந்தி சந்தி மத்தியானத்தில் ஜெபித்திடவே

                        நல்ல அருள் ஆவிவரம் தாருமே  - 2 - இந்த

            ஜெபவேளை எமக்கானந்தம்

 

4.         ஊர் ஆரோன் இருவரும் கரங்களை சுமந்திட

            ஊக்கமாய் ஜெபம் செய்தாரே

                        பக்தன் மோசே போல் ஜெயம் பெற

                        ஜெபித்திடவே நித்திய பரனே கிருபை தாருமே - 2 - இந்த

            ஜெபவேளை எமக்கானந்தம்

 

5.         உயர் கர்மேல் மலைமீது ஜெபித்திடும்

            எலியா போல் துயருற்ற மகள் அன்னாள் போல்

                        தாசன் தானியேல் எனும் பக்தர் பலர் ஜெபித்த

                        அந்த தனி ஜெப வரந் தாருமே - 2 - இந்த

            ஜெபவேளை எமக்கானந்தம்

 

6.         உபவாச ஜெபமோ அகாஸ்வேரு ராஜனின்

            உளமதை திருத்தினாலே

                        எஸ்தர் ராணி தன் ஜெபம் கேட்டு தயவடைந்தாள்

                        இன்றும் எமக்குந்தன் தயை தாருமே - 2 - இந்த

            ஜெபவேளை எமக்கானந்தம்

           

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=eXZPTuJjDs8

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு