பேர் சொல்லி அழைத்தீர் பரமப் பிதாவே

பேர் சொல்லி அழைத்தீர் பரமப் பிதாவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

            பேர் சொல்லி அழைத்தீர் பரமப் பிதாவே

          பார் தலத்தில் என்னைத் தெரிந்தெடுத்தீர்

                        நீர் எந்தன் சொந்தம்

                        நான் உமதடிமை - 2 - பேர் சொல்லி

 

1.         ஆத்தும மணாளன் என் இயேசு ராஜா (2)

            ஆவியில் என்னோடு தங்கிடும் தேவா (2)

            தெய்வீக அன்பும் அகமதில் பொங்கும்

            மெய்மறந்தே சிந்தை மறுரூபமாகும் - பேர் சொல்லி

 

2.         துன்பங்கள் என்னை உம்மண்டை சேர்க்கும்

            இன்னமும் நீதியின் பாடுகள் தாரும் (2)

            ஆதி விஸ்வாசம் அனலாய் எழும்பும்

            ஆண்டவரே என்னில் பிரியமே கொள்ளும் - பேர் சொல்லி

 

3.         பொல்லா உலகம் நல்லோரைப் பகைக்கும்

            பண்பு பரிசுத்த வாழ்வையும் தூற்றும் (2)

            தீமையணுகா காத்திடுவீரே

            தம்மையே நம்பினோர் அடைக்கலம் நீரே - பேர் சொல்லி

 

4.         சீக்கிரம் வாரும் சீயோனில் சேரும்

            பாக்கியம் தாரும் உம் பொன்முகம் காண

            தீயோரில்லாத தேவனின் இராஜ்ஜியம்

            தந்திடும் ஆறுதல் இதுவே என் வாஞ்சை - பேர் சொல்லி

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=zoy5e7y9vN0

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு