18 March 2024

வெற்றி வேந்தன் இயேசு வருகின்றார்

வெற்றி வேந்தன் இயேசு வருகின்றார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   வெற்றி வேந்தன் இயேசு வருகின்றார்

                        நாம் வாழ்த்தி வரவேற்கிறோம்

                        விண்தூத சேனை பரன் இயேசு பக்தர்கள்

                        வானில் ஒன்று சேரும் நாளிதோ

 

1.         ஏழை எளிய அவதாரம் எடுத்து

            இயேசு நம் இதயத்தை கவர்ந்தாரல்லோ

            மனத்தூய்மை விரும்பிடும் மனிதரையே

            தனக்காக தெரிந்து இயேசு அழைத்தாரல்லோ

 

2.         எக்காலமும் நான் மறவேன் தேவ அன்பை

            என்னதான் இதற்க்கீடு நான் செய்வேனோ

            உள்ளம் நன்றி நிறைந்தே நான் துதி பாடியே

            உயிருள்ள கிறிஸ்தே நான் உம்மை சேவிப்பேன்

 

3.         வந்தாரே புவியில் மரித்தாரே பலியாய்

            வேதம் நிறைவேற உயிர்த்தாரல்லோ

            இனி காலம் செல்லாது எதிர் நோக்குவோம்

            இவர் மேசியா மீண்டும் வருகின்றாரே

 

4.         சாலோமின் ராஜா சாரோனின் ரோஜா

            சாந்த சொரூபி சர்வ வல்லவர்

            செங்கோலும் யூதாவில் துளிர்க்கின்றதே

            சமாதான பிரபுவே நீர் வாரும் தேவா

 

5.         எந்தை என் இயேசு வருவார் என்றெண்ணை

            சிந்தை மனம் யாவும் களிகூறுதே

            விந்தையாய் அவர் சாயல் அடைந்தேகுவேன்

            பந்தய பொருள் நாடி பறந்தே செல்வேன்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...