பொங்குதே
ஆனந்தம்
புவி
எங்குமே இல்லா
பேரானந்தம்
பொங்குதே
ஆனந்தம் - 2
1. வையகம்
தந்திடாதின்பம்
இயேசையன்
அளித்ததானந்தம்
- 2
பொய்யனுக்கோ
புகலவொண்ணா
நாசம் (2)
மெய்யனகற்றினார்
என் பாவதோஷம்
(2) - பொங்குதே
2. பரலோக மேன்மை
துறந்து
நரலோக
மானிடனாய்
பிறந்து - 2
எவர்க்குமே
கிடையாத சிலாக்கியம்
பரமனை நம்புவோர்க்களித்தார்
நல்பாக்கியம்
(2) - பொங்குதே
3. குருசினில்
சிந்தின இரத்தம்
குரு இயேசுவில்
உண்டான சுத்தம்
- 2
கல்வாரியில்
தெய்வ மகத்துவ
நேசம் (2)
கல்லான
இதயமும் கனிந்திடும்
பாசம் (2) - பொங்குதே
4. பாவ பரிகார நாமம்
கொடும்
ரோகப்பரிகார
நாமம் - 2
சர்வ லோகத்திலும்
மேலான நாமம் (2)
சர்வ ஜனத்திற்கும்
இரட்சண்ய
நாமம் (2) - பொங்குதே
5. வானவன்
சபையிலோ வந்து
பலதானங்கள்
அன்புடன் தந்து
- 2
சரீரமாம்
சபை பூரணமாக
(2)
சற்குணங்கள்
கொண்டு அலங்கரித்தாரே
(2) - பொங்குதே
6. மணவாளன்
வேகமே வருவார்
மணவாட்டியை
வானில் சந்திப்பார்
- 2
ஆ! இன்பமே
எமக்காகுமே
அந்நாள் (2)
ஆத்ம நேசர்
இயேசு தான் வரும்
பொன்னாள்
(2) - பொங்குதே
- டேவிட்
பொன்னுசாமி
https://www.youtube.com/watch?v=PeciErBzXOs
No comments:
Post a Comment