விஸ்வாசத்தாலே நாமும் பிழைப்போம்

விஸ்வாசத்தாலே நாமும் பிழைப்போம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   விஸ்வாசத்தாலே நாமும் பிழைப்போம்

                   பசுமை செழிப்புடன் வாழ்வோம்

                        இயேசு தேவனை நம்பினோரே

 

1.         விஸ்வாசம் என்னில் கடுகளவு இருந்தால்

            வீழ்த்திடுவோம் மலையை கடலிலே

            உலகை ஜெயித்திடுமே விஸ்வாசம்

            உத்தமர் இதயத்தில் தங்கும் - விஸ்வாசத்தாலே

 

2.         கர்த்தரைக் கண்டு விஸ்வாசிப்பதிலும்

            காணாமல் நம்பினால் பாக்கியமே

            தரிசித்தல்ல விசுவாசத்தாலே

            தங்கி நம்மில் வசிக்கும் கர்த்தருக்குள்

            பரிசுத்த ஆவியிலே மகிழ்ந்து நாம்

            பூரண மகிமையடைவோம் - விஸ்வாசத்தாலே

 

3.         வீரர்களாக நின்றிடுவோமே

            விஸ்வாச சோதனை ஏற்படினும்

            பொன்னைப் போல் புடமிட்டபோதும்

            பொன்னாக நம் விசுவாசம் விளங்க

            புகழ்ச்சி கனம் மகிமை கிடைக்குமே

            பரமன் வெளிப்படும் நாளில் - விஸ்வாசத்தாலே

 

4.         தேவக்குமாரன் வந்திடும் நாளில்

            சுய விஸ்வாசத்தோடே பறப்போம்

            மூலைக்கல் இயேசு திட அஸ்திபாரம்

            மாளிகையாய் அவர்மேல் நிலைந்து நாம்

            பரம அழைப்புடன் சேர்ந்து சீயோனில்

            பிதாவின் முகம் கண்டு வாழ்வோம் - விஸ்வாசத்தாலே

           

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=Co4aX-NnAjo

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு