நீதியின் கரம் உன்னைத் தாங்கும்

நீதியின் கரம் உன்னைத் தாங்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          நீதியின் கரம் உன்னைத் தாங்கும்

            நித்திய தேவன் உன் கர்த்தர்

            அவரின் நீதியின் கரம் உன்னைத் தாங்கும்

 

                        பயப்படாதே கலங்கிடாதே

                        பொறுமையோடே காத்திருப்பாயே - நீதியின்   

 

1.         கூப்பிடும் குரலைக் கேட்பார்

            கர்த்தர் செவியோ மந்தமில்லை

            குருசில் விரித்தழைக்கும்

            கரங்கள் குறுகவில்லை

            பதறிடாமல் அமர்ந்தே ஜெபி

            பதில் கிடைத்திடும் நீ மகிழ்வாய் - நீதியின்

 

2.         வாய்த் திறவாமலே இயேசு

            வாரடிகள் சகித்து நின்றார்

            உனக்கு சமாதானத்தை

            உண்டாக்கும் ஆக்கினையை

            தனது தோளில் சுமந்தார் அவர்

            தழும்பினால் குணம் நீ அடைவாய் - நீதியின்

 

3.         தோல்வி போல் தோன்றினும் குருசில்

            தூய இயேசு ஜெயம் சிறந்தார் - 2

            உன்னைப்போல் சோதிக்கப்பட்டார்

            உனக்கும் உதவி செய்வார்

            பரமன் சிலுவையை நோக்கிப்பார்

            பிதாவின் மாட்சிமை விளங்கும் - நீதியின்

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=HdI_gcsg8fU

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு