சரணம் ஐயா தேவனே

சரணம் ஐயா தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

1.       சரணம் ஐயா தேவனே

            சர்வ வல்ல தேவனே - (2)

            பாவம் தீர ஜீவன் விட்ட

            ஜீவனுள்ள தேவனே - (2)

 

                        இயேசுவே, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

                        ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்!

 

2.         பரிசுத்தத்தை சிநேகிக்கும்

            பரிசுத்தராம் தேவனே - (2)

            இதய சுத்தம் என்னில் காண

            என் உள்ளத்தில் இன்று நீர் - (2) - இயேசுவே

 

3.         நித்தம் எம்மை நடத்துவீர்

            நம்பினோரை கைவிடீர் - (2)

            மக்கள் எல்லாம் உம் படைப்பு

            ஒருவரையும் புறக்கணீர் - (2) - இயேசுவே

 

4.         நொறுங்கிப் போன வாழ்வையும்

            புதியதாக மாற்றுவீர் - (2)

            நொந்துபோன குடும்பங்களையும்

            மீண்டும் வாழச் செய்குவீர் - (2) - இயேசுவே

 

5.         ஜெயம் கொடுக்கும் தேவனே

            கரம் கொடுத்து நடத்துவீர் - (2)

            ஜெயத்திற்கு மேல் ஜெயத்தை காண

            என்னுடனே இன்று நீர் - (2) - இயேசுவே

 

6.         அற்புதங்கள் செய்குவீர்

            அதிசயங்கள் காட்டுவீர் - (2)

            இம்மையிலும் மறுமையிலும்

            எங்களை நீர் நடத்துவீர் - (2) - இயேசுவே

 

- எமில் ஜெபசிங்

 

https://www.youtube.com/watch?v=qC-FRpDY6vE

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு