வாழ்க வாழ்க பாரத தேசம்

வாழ்க வாழ்க பாரத தேசம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   வாழ்க வாழ்க பாரத தேசம்

                        வாழ்க வாழ்க பாரத தேசம் - (2)

 

1.         கட்சி கொடிகள் பல பல வகையாம்

            தேசக் கொடியை காக்கவே அவையாம் - (2)

            பாரத தேசம் சுதந்தர தேசம்

            எத்தனை சலுகை! எத்தனை உரிமை!

 

                        வாழ்க வாழ்க பாரத தேசம் - 2

 

2.         நாவின் மொழிகள் பல பல உண்டு

            உள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ - (2)

            அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே

            ஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே

 

                        வாழ்க வாழ்க பாரத தேசம் - 2

 

3.         நீரோ, பயிரோ நமதென வேண்டாம்

            அனைத்து இந்தியர் சமமென வேண்டும் - (2)

            ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்

            விட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம்

 

                        வாழ்க வாழ்க பாரத தேசம் - 2

 

4.         உழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர்

            நாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் - (2)

            அவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு

            சிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம்

 

                        வாழ்க வாழ்க பாரத தேசம் - 2

 

5.         லஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம்

            வன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் - (2)

            கடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை

            என்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம்

 

                        வாழ்க வாழ்க பாரத தேசம் - 2

 

6.         ஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம்

            மதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் - (2)

            சிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம்

            அன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம்

 

                        வாழ்க வாழ்க பாரத தேசம் - 2

 

7.         அனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே

            அனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் - (2)

            அதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும்

            இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே

 

                        வாழ்க வாழ்க பாரத தேசம் - 2

 

- எமில் ஜெபசிங்

 

https://www.youtube.com/watch?v=BKQy6MYkFYo

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு