19 March 2024

இயேசு ஆபிரகாமிலும் பெரியவர்

இயேசு ஆபிரகாமிலும் பெரியவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

1.       இயேசு ஆபிரகாமிலும் பெரியவர்

          இயேசு யாக்கோபிலும் பெரியவர் - 2

                        இயேசு மோசேயிலும் பெரியவர்

                        இயேசு சாலமோனிலும் பெரியவர் - 2

            யோவான்ஸ்நானிலும், யோனாவிலும்

            தேவ ஆலயத்திலும் தூய ஓய்வு நாளிலும்

            எல்லா தேவர்களிலும் பெரியவர்

                        நமக்குள் இருப்பவர் நியாயம் தீர்ப்பவர்

                        நம் இருதயத்திலும் பெரியவர் - 2

            இந்த உலகத்தில் இருப்பவனைப் பார்க்கிலும்

            இயேசு பெரியவர் சர்வ வல்லவர்

            இயேசு சாத்தானை முறியடித்தவர்

            வானம் பூமியில் சகல அதிகாரமும்

            எனக்கு உண்டென்று சொன்னவர்

            இயேசு கிறிஸ்துவே உலக இரட்சகர்

 

2.         எந்தன் எஜமான் இயேசு பெரியவர்

            எல்லா ஊழியரிலும் பெரியவர்

            இயேசு மரியாளிலும் பெரியவர்

            ஏக தேவ மகனே பெரியவர்

            எல்லா நாமங்களிலும் மனிதரிலும்

            சர்வ சிருஷ்டிகளிலும் தேவ தூதர்களிலும்

            சர்வ லோகங்களிலும் பெரியவர்

                        பிரதான மேய்ப்பராம் இயேசு பெரியவர்

                        பேராயர்களிலும் பெரியவர் - 2

            சீயோன் மலைமேல் அப்போஸ்தலர்கள் நடுவிலே

            சர்வ சங்கமாம் தேவ சபையிலே

            ஜெய கிறிஸ்து ராஜாவே பெரியவர்

 

3.         இயேசு பாலனாய் பிறந்தது அதிசயம்

            இது தேவபக்தியின் இரகசியம்

            ஆத்ம இரட்சிப்பு நமக்கு அவசியம்

            அவர் இரத்தத்தால் கிடைக்கும் நிச்சயம்

            ஆதி தேவ சத்தியம் நம் சாட்சியம்

            பரிசுத்த ஜீவியம் இது நமது இலட்சியம்

            பரனோடு வாழ்வோமே நித்தியம்

                        சீரேசு நாமமே போதுமே ஜெயம்

                        சுவிசேச ஊழியம் நம் பாக்கியம் - 2

            சீஷராக நாம் மாறுவது சிலாக்கியம்

            சமாதானமே சபையின் ஐக்கியம்

            சேர்த்திடும் நம்மை தேவ ராஜ்ஜியம்.

 

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=hvd5eeHptxY

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...