ஆவியின் கனியோ தெய்வீக கனியே
ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம்
ஆவிக்குள்ளாய் நாம் பிழைப்போம்
ஆவிக்குரியோரின் சாட்சியிதே
அற்புத ஜீவியமே - தூய
ஆவிக்குரியோரின் சாட்சியிதே
அற்புத ஜீவியமே
பரிசுத்தாவி பொழியுதே
பாத்திரம் நிரம்பி வழியுதே
- 2
புதிய ஜீவன் இயேசு தந்தார்
பெலத்தின் மேல் நாம் பெலனடைவோம்
1. அன்பு சந்தோஷம் சமாதானம்
நீடிய பொறுமை தயவுமே
நற்குணம் விசுவாசம் சாந்தம் (2)
இச்சையடக்கமே நவகனி
திவ்ய சுவாபம் பெற்றுக் கொள்வோம் - பரிசுத்தாவி
2. மாமிச சிந்தை மரணமே
மனதின் தூய்மை அகலுமே
ஆவியின் சிந்தையினால் நமக்கு (2)
ஜீவன் சமாதானம் கிடைக்குமே
ஜீவ ஊற்றெம்மில் பொங்கிடுமே - பரிசுத்தாவி
3. வார்த்தை நடத்தை அன்பு கற்பு
விசுவாசம் நல் ஆவியிலும்
ஒருவருக்கொருவர் சபையில் (2)
ஒளியின் பிள்ளைகள் மாதிரியாய்
ஒற்றுமை பண்புடன் நாம் திகழ்வோம் - ஆவியின்
- சாராள் நவரோஜி
No comments:
Post a Comment