18 March 2024

இயேசு பாலனாய் பிறந்தார்

இயேசு பாலனாய் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இயேசு பாலனாய் பிறந்தார்

                        இயேசு தேவனே பெத்லகேமிலே

                        ஏழைக் கோலமாய் முன்னணை

                        புல்லணை மீதிலே பிறந்தார்

 

1.         உன்னதத்தில் தேவ மகிமை

            பூமியிலே சமாதானமும்

            மானிடரில் பிரியம் உண்டாவதாக

            என்று தேவ தூதர் பாடிட - இயேசு

 

2.         விண்ணை வெறுத்த இம்மானுவேல்

            விந்தை மானிடவதாரமாய்த்

            தன்னைப் பலியாகத் தந்த ஒளி இவர்

            தம்மை பணிந்திடுவோம் வாரும் - இயேசு

 

3.         ஓடி அலைந்திடும் பாவியைத்

            தேடி அழைக்கும் இப்பாலகன்

            பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்

            பாதம் பணிந்திடுவோம் வாரும் - இயேசு

 

4.         கைகள் கட்டின தேவாலயம்

            கர்த்தர் தங்கும் இடமாகுமோ

            நம் இதயமதில் இயேசு பிறந்திட

            நம்மை அளித்திடுவோம் வாரும் - இயேசு

 

5.         அன்பின் சொரூபி இப்பாலனே

            அண்டி வருவோரின் தஞ்சமே

            ஆறுதல் அளித்து அல்லல் அகற்றிடும்

            ஆண்டவரை பணிவோம் வாரும் - இயேசு

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=HxTp8Ici7hk

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...