கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்
பல்லவி
கொண்டு
வாருங்கள் (2)
என் மக்களை
என் பக்கமாக கொண்டு
வாருங்கள்
ஆற்றி தேற்றுங்கள்
ஆசீர்வதியுங்கள்
வாழப் பிறந்த
மனிதர்களை கொண்டு
வாருங்கள்
அனுபல்லவி
குற்ற
உணர்வை கொல்லும்
உணர்வு கொண்டு
வாருங்கள்
சுத்தம்
செய்யும் எந்தன்
இரத்தம் கொண்டு
வாருங்கள்
தாகம்
உள்ளோர் அனைவரையும்
கொண்டு வாருங்கள்
பாவம்
தீர்க்கும் சிலுவைப் பக்கம்
கொண்டு வாருங்கள்
சரணங்கள்
1. மத மாற்றம்
வேண்டாம்
மன மாற்றம்
தேவை
விரும்பி
வரும் ஜனங்கள்
மட்டும் கொண்டு
வாருங்கள்
வருகை வரும்வரை
கிருபை சிலுவையில்
வாழப் பிறந்த
மனிதர்களைக் கொண்டு
வாருங்கள் - குற்ற
2. என்னைக்
கண்டவன்
பிதாவைக்
கண்டவன்
வருந்தி
வாழும் ஜனங்கள்
யாரும் கொண்டு
வாருங்கள்
வரும் யாவரையும்
தள்ளவே
மாட்டேன்
வாழப் பிறந்த
மனிதர்களைக் கொண்டு
வாருங்கள் - குற்ற
3. பொறுப்பை
உணர்ந்தோரே
திருச்சபையோரே
தீவிரமாய்
ஓடிச்சென்று கொண்டு
வாருங்கள்
அறுப்பு
மிகுதியே
ஆட்கள்
இல்லையே
காலம் சிறிது
கடமை பெரிது கொண்டு
வாருங்கள் - குற்ற
- எமில் ஜெபசிங்
https://www.youtube.com/watch?v=qG5sHmuixHk
Comments
Post a Comment