தேவ எக்காளம் தொனிக்கவே
பல்லவி
தேவ எக்காளம்
தொனிக்கவே
தேவாதி
தேவன் தோன்றுவார்
சரணங்கள்
1. முன் மறைந்த
அருமையானோர்
முதல்
வருவார் இயேசுவுடன்
பின்பு
நாமும் அண்ணலோடு
இன்பமடைவோம்
என்றுமென்றும்
- தேவ
2. அன்பர்களோ
ஆனந்தமாய்
இன்முகமே
கண்டிடுவார்
மின்னல்
போல இன்னல் தொலைய
இன்பமே
இனி என்றுமென்றும்
- தேவ
3. பூரணரே
பறந்திடுவார்
பொன் முடியும்
தரித்திடுவார்
பாரிடத்தின்
பாடு சகித்தோர்
பாடி மகிழ்வோம்
என்றுமென்றும்
- தேவ
4. ஆயிரமாம்
தூதர் சூழ
அடியாரும்
அரசாள
அல்லேலூயா
ஆர்ப்பரித்தே
ஆளுவோமே
என்றுமென்றும்
- தேவ
5. ஆருயிரே
ஆதரையில்
ஆண்டுகளோ
கடந்திடுதே
என்று காண்பேன்,
எந்தனுள்ளம்
எண்ணி எண்ணி
ஏங்கிடுதே.
- தேவ
Comments
Post a Comment