கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவரே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவரே

                        கிருபை அவர் கிருபை என்றென்றும் உள்ளதே (2) - கர்த்தரைத்

 

1.         கிறிஸ்துவின் நாமம் மேலான நாமம்

            கருத்துடன் பாடி கனிவுடன் தேடி (2)

            கர்த்தர் நல்லவர் என்பதை பிரஸ்தியுங்கள் (2)

                        கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவரே

 

2.         எண்ணிலடங்கா நன்மைகள் செய்தார்

            எத்தனை அற்புதங்களோ அனுபவித்தார் - 2

            சித்தம் யாவும் அடைந்திடும் கர்த்தாவின்

            சேவையை கூற வார்த்தைகள் போதாதே  

                        கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவரே

 

3.         உங்கள் சந்தோசம் பூரணம் ஆகும்

            உள்ளம் திறந்து கேளுங்கள் யாவும் கிடைக்கும் - 2

            என்ற கர்த்தாவின் வாக்குகள் மாறாதே

            எமக்கவர் போதும் ஆசீர்வதித்தாரே

                        கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவரே

 

4.         இத்தனை நன்மை செய்தவரை நாம்

            இன்னும் நேரில் காணாமல்தான் தவிக்கிறோம் - 2

            என்ற குறையும் தீரவே விரைந்தே

            இயேசுவே வாரும் தாமதம் வேண்டாமே

                        கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவரே

 

- சாராள் நவரோஜி

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு