காவியம்
போற்றுகின்ற
கர்த்தரின் புகழ்
வாழ்க
கன்னி
மரி ஈன்றெடுத்த
கருணையின்
புகழ் வாழ்க - 2
காவியம்
போற்றுகின்ற
கர்த்தரின் புகழ்
வாழ்க
1. அன்பின்
இருப்பிடமே
பண்பின்
பாசறையே
துன்பம்
நீக்க வந்த
இன்பமே
நீர் வாழ்க - 2
அன்பான
இயேசு பிரான்
அருகினில்
இருந்தாலே
காண்போர்
என்றும் நாம்
இன்பத்தின்
பொன்நாளை
- காவியம்
2. ஆண்டவன்
வழி நடந்தால்
இனிமைகள்
தொடரும் என்று
உலகத்தை
உணர வைத்த
உத்தமரின்
புகழ் வாழ்க
விழியாலே
எமை காக்கும்
விளக்கின்
திரு ஒளியே
அழியா
புகழ் அடைந்த
அன்னலின்
புகழ் வாழ்க - காவியம்
https://www.youtube.com/watch?app=desktop&v=bxjIbe5y9vU
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment