உன்னதத்தை நோக்கும் பாதை

உன்னதத்தை நோக்கும் பாதை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          உன்னதத்தை நோக்கும் பாதை

            இன்னிலத்தைத் தாண்டுதே

                        என்னை இயேசு தம் பக்கம்

                        இழுத்துக் கொள்கின்றார். - 2

 

1.         எத்தனையோ பயங்கரங்கள்

                        எந்தன் யாத்திரையில்

            அத்தனையும் மேற்கொண்டேன்

                        நான் ஏசு நாமத்திலே - 2

            ஆண்டவர் என்னோடிருந்து

                        என்னை ஆதரித்தார் - 2

            ஆவி, ஆத்மா, தேகம் யாவும்

                        முற்றும் ஒப்படைத்தேன் - 2 - உன்னதத்தை

 

2.         தண்ணீரையும் அக்கினியையும்

                        நான் கடந்து வந்தேன்

            கண்ணீரான பள்ளத்தாக்கை
                        உருவ நடந்து வந்தேன் - 2

            மண்ணுலகின் வேதனைகள்

                        வென்று தாண்டி வந்தேன் - 2

            விண்ணுலகின் மா மகிமை

                        கண்டடைந்திடுவேன் - 2 - உன்னதத்தை

 

3.         எந்தன் ஜீவன் இந்த தேகம்

                        உள்ள நாள் வரையில்

            என்ன பாடு நோவு வந்தும்

                        தாங்குதே கிருபை - 2

            சோதனைகள் ஒன்றுமில்லா

                        மேலுலகத்திலே சேர்ந்து - 2

            வாழ்வேன் பாவமில்லா

                        மோட்ச ராஜ்ஜியத்திலே - 2 - உன்னதத்தை

 

4.         என்னிலே விசுவாசத்தையும்

                        தொடங்கினார் இயேசு

            எப்படியும் வெற்றியாக

                        அதை முடித்திடுவார் - 2

            ஓடுகின்றேன் பொறுமையோடு

                        இயேசுவை நோக்கி - 2

            சூடிடுவேன் ஜீவ கிரீடம்

                        தேவ சந்நிதியில் - 2 - உன்னதத்தை

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=osLiig4OMvc

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு