இயேசுவின் அன்பு பொங்க

இயேசுவின் அன்பு பொங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   இயேசுவின் அன்பு பொங்க

                        ஏடெடுத்தே வரைந்தேன் - 2

                        எந்தன் நாவு எழுத்தாணி

                        எடுத்துரைத்து கவி பாடும் - 2 - இயேசுவின்

 

1.         சாந்தமும் சத்தியமும் நீதியும் நேர்மையும் - 2

            சொல்லொணா அன்பு தியாகம்

            தூய்மையும் நிறைந்தவர்

                        சீர் திரியேக மைந்தன்

                        மனம் கவர்ந்த மணாளன் - 2

            உயிருள்ள மட்டும் உம்மைப் பாடி

            உம் நாமம் ஓங்க உழைப்பேனே - இயேசுவின்

 

2.         கர்த்தரின் காருணயம் எத்தனை பெரியதே

            கண்ணுறங்காமல் என்னை இராப்பகல் காப்பவர்

                        இயேசுவே எந்தன் நேசர்

                        இம்மானுவேல் எந்தன் மீட்பர் - 2

            இம்மட்டும் காத்த எபிநேசர்

            இனிமேலும் காக்கும் நல்மேய்ப்பர் - இயேசுவின்

 

3.         தூய நல் ஆவியே எந்தன் மேல் பொழியுதே

            தேற்றரவாளன் என்னை ஆற்றியே தேற்றினார்

                        துன்பங்கள் இன்பமாக

                        ஆ! மாறுதே வாரும் தேவா

                        சீயோனிலே மங்கள் நாளே

                        ஜெயகீதம் பாடி மகிழ்வேனே - இயேசுவின்

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=JIjAuXYMi1o

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு