04 March 2024

எந்தன் ஜீவனிலும் மா அருமை

எந்தன் ஜீவனிலும் மா அருமை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   எந்தன் ஜீவனிலும் மா அருமை

                   உந்தன் கிருபை கிறிஸ்தேசுவே

                        அந்தமேயில்லாத அன்பின் ஆழமதை

                        எண்ணி நான் துதித்திடுவேன்

 

1.         கந்தோஷமுடன் துதி சாற்றிடுவேன்

            கந்ததம் நல்கிடும் நன்மைகட்காய்

            நாவினாலே திரு நாமத்தை போற்றிட

            நாட்களும் போதுமோ நானிலத்தில்

 

2.         இகமதிலென் பெலன் குறைந்திடினும்

            அக மதில் உம் பெலன் பெருகுவதால்

            கழுகினைப் போல் புது வாலிபம் என்னுள்ளில்

            கிருபையால் அனுதினம் வளர்ந்திடுதே

 

3.         கோதுமை மணி மண்ணில் மாய்வது

            போல் சேவையில் ஜீவனை ஊற்றிடினும்

            தேவா நின் கிருபையின் ஊற்றென்னில்

            பாய்வதால் சோராது நிறைபலன் ஈந்திடுவேன்

 

4.         அற்புதமாய் என்னை அழைத்தவரே

            அற்பமான எந்தன் சரீரத்தினை

            தற்பரனே உந்தன் சாயலாய் மாற்றிடும்

            ஒப்பற்ற சுவிசேசம் ஈந்திட்டீரே

 

5.         கிருபையின் பூரணர் வெளிப்படும் நாள்

            மகிமையாய் நெருங்கியே வந்திடுதே

            சீர்பொருந்தி அவரோடு நாம் சீயோனில்

            சேர்ந்தொன்றாய் வாழ்வோம் நித்தியமாய்

 

https://www.youtube.com/watch?v=LvUodLdmgwc

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...