04 March 2024

ஆயிரம் வருட அரசாட்சியே

நிஜீ.கீதங்கள்:2312

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆயிரம் வருட அரசாட்சியே

                        பரிசுத்தவான்களின் ராஜ்ஜியமே

                        பரம பிதா வேத வாக்கிதே

                        பசுமை பொற்காலம் வருகின்றதே

 

1.         பசுவும் கரடியும் கூடி மேயுமே

            புலியும் வெள்ளாடும் படுத்திருக்கும்

            ஒருமித்து நடக்கும் காளையும் சிங்கமும்

            ஒரு சிறு பையனே நடத்திடுவான்

 

2.         இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரில்லை

            இகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும்

            குழந்தையின் கரங்கள்

            பாம்பின் மண் புதரில்

            களங்கம் பயமின்றி விளையாடுமே

 

3.         வறண்ட நிலங்களும் செழித்தோங்குமே

            விருட்சங்கள் இனிய கனி தருமே

            அமைதியும் நிலவும் சுக வாழ்வு துளிர்க்கும்

            அற்பாயுசுள்ளோர்கள் அதில் இல்லையே

 

4.         கிறிஸ்தேசு ராஜா புவி ஆளுவார்

            கிடைக்கும் நல் நீதி எளியவர்க்கே

            பரிபூர்ணமடைந்த மெய் தூய பக்தர்கள்

            பரனோடு நீடுழி அரசாளவே

 

 

- சாராள் நவரோஜி

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...