27 March 2026

ஆயிரம் பேரில் சிறந்தவர் என் இயேசு ராஜன்

நிஜீ.கீதங்கள்:2492

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆயிரம் பேரில் சிறந்தவர் என் இயேசு ராஜன்

            அழகில் முற்றும் சிறந்தவர் இவர் எந்தன் நேசர்

            என்னோடு என்றும் வாழ்பவர்

 

                        என் நேசர் என் நண்பர்

                        எந்நாளும் என்னை காப்பார்

                        தோளின் மேல் சுமந்திடுவார்

 

1.         கண் துயிலும் நேரம்

            என்னைத் தேடி ஓடி வந்தாரே

            கை விரலை கதவில் விட்டாரே

            உன் நேசம் இன்பம் அது மதுரம்

            என்று சொன்னாரே

            என் பிரியம் என்றுரைத்தாரே

            வெள்ளைப் போளம் வாசம் வீசிடவே

            தூப ஸ்தம்பம் போல வருகிறார்

            உள்ளம் துள்ளிப் பாடும் மகிழ்ந்தாடும்

            என்னில் எப்போதும்

 

2.         கன்மலையின் ஓரம்

            தங்கும் புறாவே என் உத்தமியே

            கண்களால் என்னை வென்றாயே

            துதி மலர் தொடுப்பேன் மாலையிடுவேன்

            என் மன்னனுக்கே புதுப் பாடல் பாடிடுவேனே

            கோடி யுகம் கூட வாழ்ந்திடுவேன்

            பாடிப்பாடி மனம் மகிழுவேன் என் தாகம் நீரே

            உம்மைப் பாட வரம் தந்தருளும்

 

3.         கர்த்தர் அன்பைப் பாட புகழ் சூட

            நாவு போதாதே ஈடு இணை ஏதும் இல்லையே

            மாந்தர் மனம் மகிழ துயர் அகல

            துணை வந்தாரே அரணில் காத்திடுவாரே

            ஆவியினால் களி கூர்ந்திடுவேன்

            நீதியினால் என்றும் வாழ்ந்திடுவேன்

            என் நேசர் வருவார் என்னை அணைப்பார்

            நான் என் சொல்லுவேன்

            மாந்தர் மனம்மகிழதுயர் அகல

            துணை வந்தாரே அரணில் காத்திடுவாரே

            ஆவியினால் களி கூர்ந்திடுவேன்

            நீதியினால் என்றும் வாழ்ந்திடுவேன்

            என் நேசர் வருவார் என்னை அணைப்பார்

            நான் என் சொல்லுவேன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...