ஆயுததாரி,
நான் ஆயுததாரி
ராஜாவின்
பக்கம் நிற்கும் ஆயுததாரி - 2
1. நிலையங்கி தரித்திருப்பார் - முகம்
சூரியனைப் போலிருக்கும் (அவர்)
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல
அவர் பூலோகம்ம அரசாளுவார்
2. இராமுழுவதும் விழித்திருப்பேன்
கண்ணுரங்க மறந்திடுவேன் (நான்)
என் காவலிலே தரித்திருப்பேன்
என் கண்களையும் ஏறெடுப்பேன்
3. எக்காளம் ஊதிடுவேன் - நாளும்
எச்சரித்து செயல்படுவேன்
என்றும் சேனைகளை வென்றிடுவேன்
என் தேசத்தை சுதந்தரிப்பேன்
No comments:
Post a Comment