27 March 2026

ஆயிரம் ஆயிரம் ஸ்தோத்திரமே இறைவா

நிஜீ.கீதங்கள்:2139

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆயிரம் ஆயிரம் ஸ்தோத்திரமே இறைவா

                        இம்மட்டும் செய்த பல நன்மைகட்காய்

 

1.         மேற்கிற்கும் கிழக்கிற்கும் உள்ள தூரமாய்

            பாவங்கள் நீக்கி விட்ட இயேசு தெய்வமே

            அக்கிரமங்கள் எல்லாம் நீர் மன்னித்து விட்டீர்

            நோய்களை எல்லாம் நீர் குணமாக்கினீர்

 

2.         பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டிட்டீர்

            கிருபையால் இரக்கத்தினால் முடிசூட்டினீர்

            நன்மையால் என் வாயை திருப்தியாக்கினீர்

            வயதை கழுகைப் போல் இளமையாக்கினீர்

 

3.         தகப்பன் பிள்ளைகட்கு இரங்கும் வண்ணமாய்

            தமக்கு பயந்தோர்க்கு இரக்கம் செய்கிறீர்

            பூமிக்கும் வானுக்கும் உள்ள தூரமாய்

            உமக்கு பயந்தோர்க்கு கிருபை செய்கிறீர்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...