24 March 2026

ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து

புத்தெழுச்சி:433

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து

                        அன்பின் சிறகில் காப்பாராக

                        ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து

                        அமைதியருளி ஆள்வாராக

 

1.         ஆபிராம் போன்றே அனைவருக்கும்

            ஆசீர்வாதமாய் அமைந்திடுவாய் - 2

            மாபிரதானம் மாண்புறுதானம்

            மாநில மீதில் நீ சமாதானம் - ஆண்டவர்

 

2.         'ஆசி பொழியேல் அகலவிடேன்'

            ஆவலின் ஏங்கல் அருள்வேண்டல் - 2

            ஆசியடைந்த யாக்கோபு மீண்டும்

            அன்பாய் ஏசாவுடன் இணையச் செய்த - ஆண்டவர்

 

3.         பெண்களுள் மரியாள் ஆசி பெற்றாள்

            பெண்குல மேன்மை அவள் ஈந்தாள் - 2

            எண்ணருள் பாடு இன்னல்கள் நேர்ந்தும்

            எண்ணியே இறையுளம் இசைந்தது போல் - ஆண்டவர்

 

4.         'இந்தச் சிறியோர்க் கெதைத் தரினும்

            எனக்கே தருவீர்' எனும் இயேசு - 2

            'எந்தையால் ஆசி பெற்றோரே வாரீர்'

            என்றதும் வலதிட மகிழ்வேற்பாய் - ஆண்டவர்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...