04 March 2024

ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன்

ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

1.       ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன்

            தீர்த்திடுவார் உந்தன் தாகமதை

            பாவங்கள் ரோகங்கள் சாபங்கள் போக்கிட

            பரிவாய் அழைக்கிறார்

 

                        வல்லவரே இயேசு நல்லவரே

                        மிக அன்பு மிகுந்தவரே

                        இயேசு வல்லவரே அவர் நல்லவரே

                        உனக்காகவே ஜீவிக்கிறார்

 

2.         ஆரு மற்றவனாய் நீ அலைந்தே

            பாவ உளைதனிலே அமிழ்ந்தே

            மாய்ந்திடாது உன்னை தூக்கி எடுத்தவர்

            மந்தையில் சேர்த்திடுவார்

 

3.         பரனின் அன்பதை அகமதிலே

            சொரிந்து தன் திரு ஆலயமாய்

            மாற்றியே தம்மைப் போல்

            தேவ சாயலாக்கி மகிமை சேர்த்திடுவார்

 

4.         வானமும் பூமியும் மாறிப் போயினும்

            வாக்கு மாறாதவர் வல்ல மீட்பர்

            காப்பார் வழுவாது உள்ளங்கையில்

            வைத்தே கலங்கிடதே நீ வா

 

 

https://www.youtube.com/watch?v=2-tkkxnUzz4

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...