02 August 2023

வேண்டும் பொழுது தேவன் தருகிறார்

வேண்டும் பொழுது தேவன் தருகிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          வேண்டும் பொழுது தேவன் தருகிறார்

            தட்டும் பொழுது தேவன் திறக்கிறார்

            தேடும் பொழுதுதான் கண்டடைகிறேன்

            தேவன் கன்மலை சென்றடைகிறேன்

                        இதோ இதோ தேவன் அழைக்கிறார்

                        இதோ இதோ தேவன் அழைக்கிறார்

 

1.         தேவனே அடைக்கலமாம்

            தேவனே படைக்கலமாம்

            யாரைக் கண்டும் அஞ்ச மாட்டேனே

            சத்துருவை கெஞ்ச மாட்டேனே

            போற்றுவேன் ஏற்றுவேன் ஸ்தோத்திரம் சாற்றுவேன்

            வெற்றி மேலே வெற்றிக் கொள்வேனே

 

2.         காலமெல்லாம் ஏந்திக் கொள்வார்

            கல் படாமல் தாங்கிக் கொள்வார்

            கர்த்தர் இயேசு கண்கள் இரண்டுமே

            நீதிமானை நோக்கும் என்றுமே

            மகிழுவேன் புகழுவேன் சாட்சிகள் பகிருவேன்

            நன்மைக்கெல்லாம் நன்றி சொல்வேனே

 

3.         வாலாக்காமல் தலையாக்குவார்

            கீழாக்காமல் மேலாக்குவார்

            கர்த்தர் உன்னை மேன்மையாக்குவார்

            நித்தம் உன்னை மேய்த்து செல்லுவார்

            பாதைகள் திறக்குது புதுவழி பிறக்குது

            ஸ்தோத்தரித்து ஆர்ப்பரிப்பேனே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...