14 August 2023

எங்கே செல்வேன் நேசரே நான்

எங்கே செல்வேன் நேசரே நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    எங்கே செல்வேன் நேசரே நான்

                        உம்மையன்றி வேறிடம்

                        உம்மில்தான் நல் திவ்யமான

                        ஜீவ சொற்கள் உண்டல்லோ

                        வாரும் தேவா என்னிடத்தில்

                        தங்குமே என் உள்ளத்தில்

 

1.         இம்மட்டும் நீர் ஆதரித்தீர்

            இனிமேலும் இரட்சிப்பீர்

            சேரும் இடம் வெகுதூரம்

            செல்லும் பாதை சரியே

            உந்தன் கரம் நீட்டி என்னை

            மென்மையாக நடத்துவீர்

 

2.         நீரே செய்த நன்மையாவும்

            யாரால் சொல்லி முடியும்

            இங்கிருக்கும் நாள்மட்டாக

            உம்மைப்போற்ற அருளும்

            பின்பு தேவ தூதருடன்

            சேர்ந்து பாடல் பாடவும்

            மோட்ச வீட்டில் ஆனந்தமாய்

            என்றும் உம்மை துதிக்கவும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...