23 August 2023

அழைத்தீரே எனதேசுவே உம்மை

நிஜீ.கீதங்கள்:1347

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அழைத்தீரே எனதேசுவே!

                   உம்மை எந்நாளும் பின்செல்லவே

                        வினை போக்கினீர் எனை தூக்கினீர்

                        துணையானதால் உம் பின் செல்லுவேன்

 

1.         தூயாவி வல்லமையால்

            பூவில் தோன்றின எம் இயேசுவே

            உம் போல நானும் தேவாவியாலே

            நிறைந்துமே மகிழ்ந்திடுவேன்

            உம்மை என்றென்றும் பின் செல்லுவேன்

 

2.         அயராது ஜெபித்தீரே நீர்

            என்றும் அருள் யாவும் தங்கினதே

            சோராது நானும் எந்நேரம் ஜெபித்து

            திருப்பாதம் சேர்ந்திடுவேன்

            உம்மை எந்நாளும் பின் செல்லுவேன்

 

3.         பாவ மாந்தர் குரல் கேட்குதே

            என்றும் செயல் மாறி அலை மோதுதே

            தரிசனம் கண்டு திறப்பினில் நிற்க

            அடியேனை அழைத்தீரய்யா

            உம்மை எந்நாளும் பின் செல்லுவேன்

 

4.         உம் வாழ்வில் எந்நாளுமே

            தேவ சித்தமே செய்தீரய்யா

            அது போல நானும் உம்சித்தம் செய்ய

            முற்றுமாய் அர்ப்பணித்தேன்

            பூவில் என்றென்றும் பின்செல்லுவேன்

 

5.         கல்வாரி மலை மீதிலே

            தம்மை பலியாக ஈந்தவரே

            அனுதினம் நானும் சிலுவை எடுத்து

            உந்தன் பின் செல்லுவேன்

            பூவில் எந்நாளும் இன்பமிதே

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...