02 August 2023

டிங் டிங் டாங் மணியோசைகள் துள்ளிட

டிங் டிங் டாங் மணியோசைகள் துள்ளிட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          டிங் டிங் டாங் மணியோசைகள் துள்ளிட

            சிங் சிங் கேரல் இன்னிசை கேட்டிட

            மீட்பர் இயேசு பாலன் வருகையே கிறிஸ்மஸ்

 

                        விண்டர் சீஸன் வெண்பனி சில்லிட

                        ட்விங்கிள் ஸ்டார்கள் எங்கும் மின்னிட

                        அன்பின் தேவன் ஆனந்த வருகையே கிறிஸ்மஸ்

 

            புல்லணை மீது அழகாய் பூத்த ரோஜா

            இந்த பூமியில் வந்த எங்கள் இயேசு ராஜா

            நட்சத்திரம் மின்னும் இரவில்

            நம்பிக்கை நாயகனாக

            பாலகனாய் தேவ மைந்தன் வந்தாரே

 

                        குடையின்றி நடந்திடும் கோடையில் இன்ப

                        அடை மழை பொழிவது போல்

                        மனமென்னும் குடிலினில் லில்லி பூவாய்

                        பாலன் பூத்தாரே

 

1.         நாளைகளை நமதாக்கும்

            நம்பிக்கையே கிறிஸ்மஸ்

            நம் ஆண்டவர் மேல் விசுவாசம்

            உறுதியாக்கும் கிறிஸ்மஸ்

 

                        எல்லோரும் ஒன்றாய் சேர்வோம்

                        இயேசுவைப்பாடி துதிப்போம்

                        அன்பை பகிர்ந்து வாழ்வோம்

                        ஆடிப்பாடி மகிழ்வோம்

 

            வேண்டுதல் கேட்டு நன்மை நமக்கு தருவாரே

            நம் இல்லம் காத்து குறைகள்

            யாவும் தீர்ப்பாரே

 

2.         புன்னகையால் பூமியினை

            அழகாக்கும் கிறிஸ்மஸ்

            ஏழைகளும் பசியாறும்

            நல் விருந்து கிறிஸ்மஸ்

 

                        மண்ணில் மனித நேயம்

                        மலரச்செய்யும் வேதம்

                        பொங்கும் தேவ கானம்

                        எங்கும் சமாதானம்

 

            பாவம் என்னும் இருளில் இருந்து மீட்பாரே

            நம்மை பரிசுத்தமாக்கி

            தேவன் என்றும் காப்பாரே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...