07 August 2023

காலங்கள் மாறிடலாம் கர்த்தர் மாறுவதில்லை

காலங்கள் மாறிடலாம் கர்த்தர் மாறுவதில்லை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          காலங்கள் மாறிடலாம் கர்த்தர் மாறுவதில்லை

          மாந்தர்கள் மறந்திடலாம்

            இயேசு மறப்பதில்லை

 

                        அழைத்தவர் உன்னை நடத்துவார்

                        படைத்தவர் உன்னை காத்திடுவார்

 

1.         சோதனைகள் வந்தாலும் சோர்ந்து போகாதே

            வேதனைகள் வந்தாலும் தளர்ந்து போகாதே

            பெலன் தரும் தேவன் இருக்கிறார்

            கிருபையால் உன்னை நிரப்பிடுவார்

 

2.         மலை போன்ற தடைகளும் உன் முன்னே வந்தாலும்

            கண்ணீரின் பாதைகளில் நீ நடக்க நேர்ந்தாலும்

            தடைகளை தகர்த்திடும் கர்த்தர்

            கன்மலை மேல் உன்னை நிறுத்திடுவார்

 

3.         பெற்றோரும் உற்றோரும் உன்னை வெறுத்தாலும்

            நண்பர்களும் சொந்தங்களும் உன்னை பிரிந்தாலும்

            தாயின் கருவில் உன்னைக் கண்டவர்

            உன்னை விட்டு விலகிடவே மாட்டார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...