23 August 2023

கொள்ளை நோயால் தவிப்போரே

கொள்ளை நோயால் தவிப்போரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கொள்ளை நோயால் தவிப்போரே

            கொள்ளை நோயை இயேசு அழிப்பார்

            கொள்ளை நோயால் தவிப்போரே

            கொள்ளை நோயை முற்றிலும் அழிப்பார்

 

                        தவறினை நாம் உணர்ந்தால்

                        மன்னிக்க வல்லவர்-நம்

                        தவறினை நாம் உணர்ந்தால்

                        மன்னிக்க வல்லவர்

                        பிள்ளையைப்போல் நம்மை

                        அவர் அணைப்பார்

 

1.         கட்டளையை மீறினால் காய்ச்சல் வரும் என்றீர்,

            வானமும் அடையும், கொள்ளை நோயும் வரும் என்றீர்

            நம்மையும் தாழ்த்தி அவரிடம் வேண்டிட்டால்,

            பரிகாரியானவர் பரிகாரம் தந்திடுவார்.

                        பொல்லாத வழிவிட்டு திரும்பியே வந்திட்டால்,

                        மன்னித்து நோய்களை குணமாக்க மாட்டீரோ!

                        யெகோவாரஃப்பா குணமாக்க மாட்டீரோ

 

2.         கடலை உலர்ந்த கரையாய் மாற்றினீரே!

            மக்களை கால் நனையாமல் கடக்கச் செய்தீரே!

            கலங்காதே! திகையாதே! உடன் இருப்பேன் என்றீரே!

            உம்மை தேடுகின்றோரை கைவிடேன் என்றீரே!

                        திக்கற்ற நேரத்தில் தஞ்சமும் நீரன்றோ!

                        நோய் நொடி பிணி தீர்த்து காத்திடுவீரே,

                        யெகோவாரஃப்பா சுக வாழ்வு தருவீரே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...