02 August 2023

அன்பே மனித உருவமாய்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்பே மனித உருவமாய்

            அவதரித்தார் நம்மில் பிறந்தார்

            என்றும் இம்மானுவேலராய் தோன்றினார்

            நம்மில் வாழ்கின்றார்

                        அவர் நாமம் உயர்த்திப் பாடிடுவோம் (அல்லேலூயா)

                        அவர் மகிமை எங்கும் பறைசாற்றுவோம் அல்லேலூயா

 

2.         வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்

            அந்த மகிமை இருளை நீக்கியது

            நம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவே

            அந்த ஒளியை நமக்காய் தந்தாரே

            அவர் அன்பை ருசித்த நாமும்

            அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம் - அல்லேலூயா - அன்பே

 

3.         நம்மை ஐசுவரியவானாய் மாற்றிடவே

            அவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரே

            அன்று குப்பையாய் இருந்த மானிடனை

            அவர் மனிதனாய் நிற்கச் செய்தாரே

            அவர் கிருபை பெற்ற நாமும்

            அவர் ராஜ்யத்தை கட்டிட உதவி செய்வோம் - அல்லேலூயா - அன்பே

 

- Lemuel Singh

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...