23 August 2023

ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே

ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே

            ஒப்புறவை தந்திடும் கல்வாரியே

            ஒற்றுமையாய் பூவுலகம்

            ஒருமிக்க பகைத்தீர்த்த

            ஓங்கியே நிற்கின்ற கல்வாரியே

 

                        கல்வாரியே கல்வாரியே

                        ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே

 

1.         இறை அன்பை பகர்ந்தூட்டும் கல்வாரியே

            இறைவனின் தியாகம் பார் கல்வாரியே

            இல்லாற்கும் பொல்லாற்கும் இயலாத பாவிக்கும்

            இறையருள் தந்திடும் கல்வாரியே

 

2.         எல்லாரையும் ஏற்கும் கல்வாரியே

            பொல்லாரை வீழ்த்திடும் கல்வாரியே

            என் சாபம் நீக்கிட என் பாவம் போக்கிட

            நிலை வாழ்வை தந்திடும் கல்வாரியே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...