காலமோ கொஞ்சம் தான் மீதி

காலமோ கொஞ்சம் தான் மீதி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    காலமோ கொஞ்சம் தான் மீதி

                        தேவையோ ஏராளம் உண்டு

                        பின் நோக்கி பாராமல் இடை நின்றுவிடாமல்

                        முன்நோக்கி சென்றிட வேண்டும்

                        இயேசு ராஜன் நம்மோடு இருப்பதாலே

1.         சுவிசேஷ ஊழியம் செய்ய

            தவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றே

            உலகோர் பகைத்தாலும் கஷ்டமேதும் வந்தாலும்

            உண்மை வழியை அறிவிக்க வேண்டும்

            இயேசு சமாதானம் அருளுவதாலே

2.         முன்னோடியாய் செல்லும் இயேசு

            பின்னேறியே நாமும் செல்வோம்

            நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்

            முழுமனதுடன் ஊழியம் செய்வோம்

            விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே

3.         நம்மை அனுப்பிய தேவனின் நாமம்

            அதை அறியாதோர் அறிந்திட செய்வோம்

            பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்று

            முழு பொறுப்பினை நாம் ஏற்க வேண்டும்

            வல்ல தேவன் நம்மோடிருப்பதாலே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு