புது நாட்கள் உன் முன்னே வைத்தேனே
புது
நாட்கள் உன் முன்னே
வைத்தேனே
மகிழ்ந்து
நன்றி சொல்லு
புது
வருஷத்தை
உனக்கு தந்தேனே
மகிழ்ந்து
நன்றி சொல்லு
உன்னை கீர்த்தி
புகழ்ச்சியாய்
வைப்பேனே
உன் துக்க
நாட்கள் முடிந்திடும்
நீ ஆசீர்வாதமாய்
இருப்பாய்
உன் சுக
வாழ்வு துளிர்க்கும்
1. வெட்கத்திற்கு
பதிலாய் இரண்டத்தனை
பலனைத்
தந்து
ஆசீர்வதிப்பேன்
சம்பலுக்குப்
பதிலாய் சிங்காரம்
தந்து
உயர்த்தி
ஆசீர்வதிப்பேன்
நான்
செய்வதைத் தடுப்பவரில்லை
நினைத்ததை
நிறுத்துவாரில்லை
சொன்னதை
செய்யும் தேவன்
நானே
2. மலைகள்
விலகினாலும்
பர்வதங்கள்
பெயர்ந்தாலும்
என்
கிருபை விலகாது
தண்ணீரைக்
கடந்தாலும்
அக்கினியில்
நடந்தாலும்
உன்னோடு
கூட இருப்பேன்
3. எகிப்து தேசத்தில்
நடந்தது போல் உன்னை
அதிசயம்
காணச் செய்வேன்
திறந்த
வாசலை உனக்கு முன்
வைத்தேன்
பூட்டவே முடியாதே
4. சின்னவன் ஆயிரம்
சிறியவன் பலத்த
ஜாதியுமாவானே
உனக்கு
விரோதமாய் உருவாகும்
ஆயுதம்
வாய்க்காதே
போகும்
5. பலத்தினால்
அல்ல பராக்கிரமம்
அல்ல
என்
ஆவியாலே ஆகும்
மனுஷனால் கூடாத
காரியமெல்லாம்
என்னாலே
ஆகும்
6. நித்தம்
உன்னை நடத்தி வறட்சி
காலத்திலும்
ஆத்துமாவை
திருப்தி செய்வேன்
இந்த
புது ஆண்டில் ஆசீர்வாதமான
மழையை
பெய்யச் செய்வேன்
7. ஏற்ற
காலத்தில் உங்கள்
எல்லையில்
மழையைப்
பெய்யச் செய்வேன்
நானே
உங்கள் தேசத்தில்
சுகமாய்
குடியிருக்கப்
பண்ணுவேன்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment