08 August 2023

இதுவரை நீ இழந்ததெல்லாம்

இதுவரை நீ இழந்ததெல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    இதுவரை நீ இழந்ததெல்லாம்

                        நூறத்தனையாய் திருப்பிகொள்வாய்

            முந்தினதை நீ யோசிக்க வேண்டாம்

            பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்

                        இறைவன் இயேசு உண்டே

                        கலங்கிட வேண்டாம்

 

1.         துன்பம் ஓன்று வரும் போது

            உன் சாபம் என்று நினைப்பதென்ன - 2

            உனக்காக சிலுவையிலே

            உன் சாபம் எல்லாம் ஒழித்திட்டாரே - 2

            துன்பம் கண்டு துயரடையாதே

            இறைவன் இயேசு உண்டே

 

2.         தோல்வி ஓன்று வரும் போது

            உன் பாவம் என்று நினைப்பதென்ன

            உனக்காக சிலுவையிலே

            உன் பாவம் எல்லாம் ஒழித்திட்டாரே

            தோல்வி கண்டு துவண்டுபோகாதே

            இறைவன் இயேசு உண்டே

 

3.         பயந்திடும் நிலை வரும் போது

            எதிரி பெலத்தை நினைப்பதென்ன

            துரைத்தனங்கள் அதிகாரங்கள்

            உரிந்துகொண்டு வெற்றி சிறந்தார்

            சூழ்நிலை கண்டு பயந்து போகாதே

            இறைவன் இயேசு உண்டே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...