10 August 2023

காலை நேரம் இன்ப ஜெப தியானமே

காலை நேரம் இன்ப ஜெப தியானமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   காலை நேரம் இன்ப ஜெப தியானமே

                        கருணை பொற் பாதம் காத்திருப்பேன்

                        அதிகாலையில் அறிவை உணர்த்தி

                        அன்போடு இயேசு தினம் பேசுவார்

 

1.         எஜமான் என் இயேசுவின் முகம் தேடுவேன்

            என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே

            எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்

            என்னை அழைத்தார் அவர் சேவைக்கே

 

2.         பலர் தீமை நிந்தை மொழிகள் உன் மேல்

            பொய்யாய் சொன்னாலும் களிகூறுவாய்

            இதுவே உன் பாக்கியம்

            என் இயேசு சொன்னார்

            இந்த மெய் வாக்கு நிறைவேறுதே

 

3.         சிலுவை சுமந்தே அனுதினமே

            சோராமல் என் பின் வா என்றாரே

            அவரோடு பாடு சகித்தாளுவேனே

            ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே

 

4.         பறந்து புறாப் போல் சிறகடித்தே

            பாடிச் சென்றோர் நாள் இளைப்பாறுவேன்

            பரலோகம் வாசல் பரம் சீயோனே

            பூரித்து என்னை வரவேற்குமே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...