02 August 2023

வனாந்திர யாத்திரையில் களைத்து நான்

வனாந்திர யாத்திரையில் களைத்து நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   வனாந்திர யாத்திரையில் களைத்து நான்

                        சோர்ந்து போகும் நேரங்களில்

                        நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்

                        என் வாழ்வு செழித்திடுமே

 

1.         செங்கடல் எதிர்த்து வந்தும்

            பங்கம் வந்திடாமல் அங்கு

            பாதை ஒன்று கண்ணில் தெரியுமே

            விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்

            தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார்                    - வனாந்திர

 

2.         தேவனை மறக்கச் செய்யும்

            வேதனை நிறைந்த வாழ்வை

            சத்துரு விதைத்திடும் போது

            மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்

            காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே                       - வனாந்திர

 

3.         தேவனை மறக்கச் செய்யும்

            ஆதவன் ஒளியுடன்

            சத்துரு விதைத்திடும் போது

            மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்

            காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே                       - வனாந்திர

 

4.         இனிமையற்ற வாழ்வில் நான்

            தனிமை என்று எண்ணும் போது

            மகிமை தேவன் தாங்கிடுவாரே

            இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்

            இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே                      - வனாந்திர

 

5.         கானானின் கனிகள் நல்ல வானவரின்

            திருமுகமென் உள்ளத்தை

            மகிழச் செய்யுமே

            வாழுவேன் என்றுமே நேசரின் நாட்டினில்

            வாழ்த்துவேன் இயேசுவை உள்ளம் பொங்கிட                - வனாந்திர

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...