எந்தக் காலமும் நன்றி சொல்லுவேன்

எந்தக் காலமும் நன்றி சொல்லுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    எந்தக் காலமும் நன்றி சொல்லுவேன்

                        எந்த நேரமும் நன்றி சொல்லுவேன்

                        தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

                        கர்த்தாதி கர்த்தர் இயேசுவை

                        என்றும் பாடியே புகழ்ந்திடுவேன்

                        என்றும் பாடியே புகழ்ந்திடுவேன்

 

1.         துக்க மெல்லாம் மாற்றி சந்தோசத்தை ஊற்றி

            நிறைவினால் நிரப்பினாரே

            வாதைகளை நீக்கி பாதை செவ்வை ஆக்கி

            குறைவின்றி நடத்தினாரே

            எந்தன் கால்களை ஸ்திரமாக்கினார்

            எந்தன் பயம் நீக்கி திடமாக்கினார்

            இஸ்ரவேல் தேவனவர் தூங்குவதில்லை

            எனை நீங்குவதில்லை

            ஓர்நாளும் என்னைவிட்டு விலகவில்லை கைவிடவுமில்லை

 

            முழுநாளும் நான் நன்றி சொல்லுவேன்

            முழங்காலினில் நன்றி சொல்லுவேன்

 

2.         எந்தன் ஜெபம் கேட்டு இக்கட்டினில் மீட்டு

            நன்மையாலே நிறைத்திட்டாரே

            இரக்கத்தால் நொக்கி உருக்கத்தால் தூக்கி

            தாயைப்போல அணைத்திட்டாரே

            எந்தன் கட்டினை அவிழ்த்து விட்டார்

            எந்தன் நிந்தையை அகற்றி விட்டார்

            இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்திடுவேன்

            எனைக் கொடுத்திடுவேன்

            செய்திட்ட பொருத்தனை செலுத்திடுவேன்

            தினம் தொழுதிடுவேன்

 

            முழுநாளும் நான் நன்றி சொல்லுவேன்

            முழங்காலினில் நன்றி சொல்லுவேன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு