காலத்தின் பலனை உள்ளத்தில்

காலத்தின் பலனை உள்ளத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

1.       காலத்தின் பலனை

            உள்ளத்தில் உணர்த்தும்

            காலத்தின் அதிபதியே

            ஞாலத்தில் எனது

            வாழ்க்கையாம் படகு

            உம் சித்தத்தில் செல்வதாக - (2)

 

                        இயேசுவே நீரே நித்தியர்

                        தேவனே நீரே நித்தியர்

                        காலத்தில் அடங்கா

                        கர்த்தனாம் தேவனே

                        நீரே நித்தியர்

 

2.         புல்லைப்போல் ஒழியும்

            தொல்லைகள் நிறைந்த

            எம் வாழ்வு வெறும் கதையே

            குமிழிபோல் தோன்றி

            மறைந்திடும் மாயை

            உணர்ந்திட உதவி செய்யும் - இயேசுவே நீரே

 

3.         உலகத்து ஆசை

            மாமிசப் பற்று

            சிற்றின்ப சோதனைகள்

            இயேசுவே எங்களை

            விடுதலை செய்யும்

            நித்திய வாசியாக்கும் - இயேசுவே நீரே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு