15 August 2023

அன்பின் ஆண்டவர் வருகை வேகம் நெருங்குதே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    அன்பின் ஆண்டவர் வருகை வேகம் நெருங்குதே

                        ஆத்தும் ஆதாயம் செய்வோம் வேகம் வேகமே

 

1.         அழிவுக்கு நேராய் விரைந்திங்கு செல்வோர்

            ஆயிரம் ஆயிரமாய் நம்முன் காணுதே

            அறியாதவர் போல் அமைதியாய் இருந்தாலோ

            ஆக்கினை நம்மேல் வந்திடும் வேகம் வேகமே

 

2.         நோவாவின் காலம் போலவே மக்கள்

            விற்பதும் கொள்வதுமாகவே இன்றே

            ஆக்கினைக்கு நேராகவே விரைந்து செல்கின்றார்

            ஆவன செய்வீர் அதற்காய் வேகம் வேகமே

 

3.         கெர்ச்சிக்கும் சிங்கம் போலவே சாத்தான்

            யார் யாரை விழுங்கலாமோ என்று நிற்கிறான்

            அவன் தனது வலையில் சேர்க்கும் லோக மாந்தரை

            அன்பரின் ஆட்சியில் சேர்ப்போம் வேகம் வேகமே

 

4.         அந்தக்காரத்தின் நாள் நெருங்கும் முன்

            அண்டிக்கொள் அன்பரின் இன்ப கரத்தை

            என்று நாம் கூறியே அவர்களாட்களை

            ஆயத்தப்படுத்திடுவோம் வேகம் வேகமே

           

5.         எக்காள சத்தம் தொனித்திடும் வேளை

            ஏகமாய் யாவரும் ஏகிடுவோமே

            இயேசுவுக்காய் ஜீவிக்காதோர் அந்த நாளிலே

            ஏற்றுக் கொள்ளப்படார் என்போம் வேகம் வேகமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...