15 August 2023

மகிமை தேவனின் மகிமை

மகிமை தேவனின் மகிமை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        மகிமை தேவனின் மகிமை

                        பொழியுதே பெருமழை போல

 

1.         பெந்தேகோஸ்து நாளில் இறங்கிய ஆவி

            பெலமாய் இந்நேரம் இறங்கிடுதே

            மண்ணான என்னை நனைத்திடுதே

            விதை போட என்னுடலை உழுதிடுதே

 

2.         பெருங்காற்றின் விசை போல என்னுடல் உணருதே

            பெருவெள்ள இரைச்சல் போல என் காதில் கேட்குதே

            மின்சாரம் பாய்வதுபோல் என்னுடல் சிலிர்க்குதே

            ஆனந்தம் நதிபோல என்னுள்ளில் பாயுதே

 

3.         துக்கமும் கவலையும் மாயமாய் மறையுதே

            பஞ்சை போலென் தேகம் இலகுவாக மாறுதே

            அந்தரங்கத்தில் என் இயேசுவை காண்கிறேன்

            அன்னிய பாஷையில் அவரோடு பேசுவேன்

 

4.         கரங்களை உயர்த்தி என்னை அர்ப்பணிக்கிறேன்

            நான் உமக்கு அடிமை என்று சம்மதிக்கிறேன்

            வானத்தின் பலகணியை திறந்தருளும்

            நிறை குடமாய் என்னை நிரப்பிவிடும்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...