திராணிக்கு மேலாக உன்னை

திராணிக்கு மேலாக உன்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          திராணிக்கு மேலாக உன்னை

            இயேசு சோதிக்கவே விடமாட்டார்

            பாடுகளை ஏற்றவர் துக்கங்களை சுமந்தவர்

            உனக்காக பரிதவிக்கிறார்-உன்

            பாடுகளை ஏற்றவர் துக்கங்களை சுமந்தவர்

            உனக்காக பரிதவிக்கிறார்

 

                        யுத்தத்தில் வல்ல தேவன் உனக்காக யுத்தம் செய்கிறார்

                        வாசல்களே திறவுங்கள் கதவுகளே உயருங்கள்

                        மகிமையின் ராஜா வருகிறார்

                        இன்றே அற்புதம் செய்வார் - உனக்கு

                        இன்றே அற்புதம் செய்வார்

 

1.         இமைப்பொழுது கைவிட்டாலும் உன்மேல்

            மனதுருகும் தேவன் அவர்

            ஒழுக்கமாக இருந்துபார் வேதனைகள் நீக்குவார்

            கண்ணீரை களிப்பாக்குவார்-அவரிடம்

            ஒழுக்கமாக இருந்துபார் வேதனைகள் நீக்குவார்

            கண்ணீரை களிப்பாக்குவார்-

 

2.         சூழ்நிலைகள் எதுவானாலும்-இயேசு

            உனக்கு துணை நிற்கிறார்

            தாயைப்போல் தேற்றுவார்

            தந்தையைப்போல் சுமப்பார்-உன்னை

            தாயைப்போல் தேற்றுவார்

            தப்புவித்து பெலப்படுத்துவார்

 

3.         விக்கினங்கள் கடருமட்டும்-இயேசு

            செட்டைகளில் மறைத்திடுவார்

            பயப்படாதே என்கிறார் மார்போடு அணைக்கிறார்

            ஜெயக்கீதம் பாடச் செய்கிறார்-நீ

            பயப்படாதே என்கிறார் மார்போடு அணைக்கிறார்

            ஜெயக்கீதம் பாடச் செய்கிறார்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு