என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்

            என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்

            உமக்காய் காத்திருப்பேன்

            உம்மையே பற்றிக் கொள்ளுவேன்

            உம் வார்த்தையால் திருப்தியாவேன்

            உம் சமூகத்தில் அகமகிழ்வேன்

 

                        இயேசைய்யா இயேசைய்யா

                        இயேசைய்யா என் நீதி நீர்தானைய்யா

                        யேகோவா சிக்கேனு நீர்தானைய்யா

                        எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

 

1.         துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்

            நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது

 

            நிரந்தர சுதந்திரம் இது

            என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது

            நித்தம் பெருகும் கிருபை கொண்டது

            என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது

 

2.         ஆபத்துக் காலத்தில் வெட்கமடைவதில்லை நான்

            பஞ்சக்காலத்திலும் என்னை வெற்றியாக்குவீர்

           

            கர்த்தரே தாங்குகிறீர்

            என் பாதையிலே நோக்கமாயுள்ளீர்

            என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை

            என் அடியை உறுதி படுத்துகிறீர்-என்னை

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு