01 August 2023

காக்கும் தெய்வம் இயேசு இருக்க

காக்கும் தெய்வம் இயேசு இருக்க

                        காக்கும் தெய்வம் இயேசு இருக்க

                        கலக்கம் ஏன் மனமே?

                        கண்ணீர் ஏன் மனமே?

 

1.         இதுவரை உன்னை நடத்தின தேவன்

            இனியும் நடத்திச் செல்வார்

            எபிநேசர் அவர்தானே - (2)

 

2.         சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்

            தெரிந்துகொள் மனமே

            சீடன் அவன் தானே

 

3.         பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்

            கூட சென்றிடலாம் பாடி மகிழ்ந்திடலாம்

 

4.         காண்கின்ற உலகம் நமது இல்லை

            காணாத பரலோகம்தான் நமது குடியிருப்பு

 

5.         சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்

            மகிமையை கொண்டு வரும் மறவாதே என் மனமே

 

6.         மலைகள் விலகும் குன்றுகள் அகலும்

            கிருபை விலகாதென்றார் மனது உருகும் தெய்வம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...