என்னதான் ஆனாலென்ன என்

என்னதான் ஆனாலென்ன என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   என்னதான் ஆனாலென்ன

                   என் மீட்பர் உயிரோடுண்டு

                        தொடர்ந்து பயணம் செய்வேன்

                        என் துணையாளர் முன் செல்கிறார் (2)

 

1.         காடு மேடு கடந்து சென்றாலும்

            கரம் பிடித்தென்னை நடத்துகின்றாரே

            ஆறுகளை நான் கடக்கும் போது

            மூழ்கி நானும் போவதில்லை

            அக்கினியில் நடக்கும் போதும்

            எரிந்து நானும் போவதில்லை (3) - என்னதான்

 

2.         மரணமே ஆனாலுமென்ன

            ஜீவனே ஆனாலுமென்ன

            பரிசுத்தரின் பின்னே செல்வேன்

            திரும்பி நானும் பார்க்க மாட்டேன்

            எனது ஜீவன் உமது கரத்தில்

            ஒருவரும் பறிப்பதில்லை (3) - என்னதான்

 

3.         கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே

            சாவு எனக்கு ஆதாயமே

            தேவனின் அன்பிலிருந்து

            பிரிப்பவர்கள் யாருமில்லை

            உமது பாதம் எனது தஞ்சம்

            எனது கோட்டை நீர்தானே (2) - என்னதான்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே