சொந்தம் எங்கே பந்தம் எங்கே
சொந்தம்
எங்கே பந்தம் எங்கே
தேடி
அலைகிறேன்
யாரும்
இல்லை என்றுதானே
கண்
கலங்குகிறேன்
நீரே என்
சொந்தம் அன்றோ
நேசரே நீரே
என் பந்தம் அன்றோ
1. வழி
தெரியா ஆட்டைப்
போல தவிக்கிறேனைய்யா
திசை
தெரியா படகைப்
போல துடிக்கின்றேனைய்யா
வழியும்
நீரே சத்தியம்
நீரே தேவன் நீரன்றோ
இத்தனை
நாளாய் இதையறியாமல்
இருந்திட்டேனைய்யா
உம்மையன்றி
யாரும் எனக்கு
சொந்தம் இல்லை
உலகில்
2. ஒன்றும்
அறியா மூடனைப்போல
வாழ்கின்றேனைய்யா
திசை
அறியா ஊமைப்போல்
தடுமாறுகின்றேனைய்யா
வாழ்வும்
நீரே வளமும் நீரே
செல்வம் நீரன்றோ
இத்தனை
நாளாய் இதையறியாமல்
வாழ்ந்திட்டேனைய்யா
உம்மையன்றி
யாரும் எனக்கு
நண்பர் இல்லை மண்ணில்
3. வாழத்தெறியா
பேதைப்போல வாழ்கின்றேனைய்யா
கண்கள்
தெரியா குருடனாக
கலங்கினேனைய்யா
ஒளியும்
நீரே வெளிச்சம்
நீரே பாதை நீரன்றோ
இத்தனை
நாளாய் இதையறியாமல்
தவித்திட்டேனைய்யா
உம்மையன்றி
யாரும் எனக்கு
தஞ்சம் இல்லை வாழ்வில்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment