22 August 2023

அன்பு தெய்வமே வழி

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    அன்பு தெய்வமே

                        வழி நடத்தும் எந்தன் மேய்ப்பரே

                        உந்தன் ஆவி என்னைத் தாங்குதே

                        எந்தன் கால்கள் உம்மை தொடரவே

 

1.         களிமண் நான் என்று அறிவீரே

            நான் பலவீன பாண்டம்தானே

            உந்தன் வெளிச்சத்தில் நடந்திட விளைகின்றேன்

            சிறுங்குண்ட இதயம் தடுக்கின்றதே

            என் மீறுதல்களால் நீர் கோபங்கொள்ளாமல்

            கிருபையாய் என்மேல் இறங்கனுமே

 

2.         கூட்டை விட்ட பறவை போலானேன்

            நான் படுத்திட இடம் இல்லையே

            ஓடு தளம் மாறிவிட்டதே நிலை தடுமாறி நிற்கின்றேன்

            இயேசுவே என்னையும் கண்ணோக்கிப் பாருமே

            பிள்ளையாக என்னையும் உயிர்ப்பிக்கனுமே-உம்

            பிள்ளையாக என்னையும் உயிர்ப்பிக்கனுமே

 

3.         புல்லின் பூவாய் மலர்ந்துள்ளேன்

            காற்றும் வீசும் வரை களித்திருப்பேன்

            நெறிதவறியவன் போலானேன்

            எப்பக்கமும் நெறுக்கப்பட்டேன்

            நீங்கா என் அவிசுவாசம் நீங்கி நான் பிழைத்திட

            கருணை என்னை காத்து இரட்சியுமே

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...